Sunday, May 24, 2009

சிங்கப்பூரில் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளும் ராஜசேகர் செவ்வி

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர தொடர் உண்ணாநிலை போராட்டத்தை நடத்திக்கொண்டுள்ளார் திரு ராஜசேகர்.

உண்ணாநோன்பு போராட்டம் சனிக்கிழமை மே 23 லிருந்து திங்கட்கிழமை மே 25 வரை நடைபெறும்.





தமிழ்வெளி தளத்திற்காக திரு.ராஜசேகரை தொடர்பு கொண்டு உண்ணாநோன்புக்கான ஆதரவை தெரிவித்து சிறு பேட்டி கண்டோம்.

தமிழ்வெளி:
இந்த உண்ணாநோன்பின் நோக்கமென்ன? உங்கள் கோரிக்கை என்ன? இதன் மூலம் என்ன வலியுறுத்த விரும்புகிறீர்கள்?

திரு.ராஜசேகர்:
இந்த உண்ணாவிரதத்தின் நோக்கம் தமிழர்களின் உணர்வுகளை சொல்வது மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ கோருவது, போர் பகுதியில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது, ஆனால் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு தமிழர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது தொடர்பான சரியான நிலவரம் தெரியவில்லை. எலிகளை கொல்வது போல் கணக்கின்றி கொல்லப்பட்டுள்ளனர்.

UN(ஐக்கிய நாடுகள் சபை) மற்றும் Red Cross(செஞ்சிலுவை சங்கம்) போன்ற அமைப்புகளை போர் நடந்த இடங்களுக்கு அனுமதியளித்து ஜெனிவா கன்வென்சன் படி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அடிப்படை தேவைகளான வீடு கட்டி தருதல் போன்ற இயன்ற உதவிகளை சிங்கப்பூர் தமிழர்கள் சார்பாகவும் சிங்கப்பூர் அரசாங்கமும் மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வலியுறுத்துகிறோம்.