Wednesday, April 28, 2010

தெளி குறும்பட வெளியீடு - தமிழ்வெளி ஆதரவு



ஏப்ரல் 30, 2010 அன்று காலை காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மண்டபத்தில் காலை 10:30 முதல் மாலை 5.00 வரை ஓவியர் உமாபதி அவர்களின் ஓவியக்கண்காட்சியும் அதன் பின்

மாலை 6:00 மணிக்கு தோழர் வே.பன்னீர் அவர்கள் இயக்கிய தெளி குறும்பட தகட்டை திரையுலக படத்தொகுப்பு மேதை திரு.B.லெனின் அவர்கள் வெளியிடுகிறார்...

தெளி இயக்குனர் தோழர் வே.பன்னீர் அவர்களுக்கும் தோழர் ஓவியர் உமாபதி அவர்களுக்கும் தமிழ்வெளி தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது...

தெளி குறும்படம் பற்றிய மா.காளிதாஸ் அவர்களின் விமர்சனம் கீழே, தெளிவாக தெரிய படத்தின் மேல் அமுக்கவும்...





விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்



Wednesday, April 14, 2010

இது என்ன தமிழ்வெளி?

இது என்ன தமிழ்வெளி?

யாருக்கெல்லாம் இந்த தமிழ்வெளி?Bookmark and Share

அரசியல், கதை, கட்டுரைகள், திரைப்படம், தொழில்நுட்பம், சும்மா ஜாலியா பொழுதை கழிக்க என எதற்கும் படிக்கலாம் தமிழ்வெளியை.... ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசா தினுசு தினுசா வருவது தான் தமிழ்வெளி...

ஆமாம் இதில் எழுதுவது யார்? இதில் எழுதுவதெல்லாம் உங்களைப் போன்றவர்களே... உங்க‌ள் குர‌ல் இங்கே சுத‌ந்திர‌மாக‌ ஒலிக்கும்...

தமிழ்வெளி ஒரு மாற்று ஊடகத்தை பெறும் முயற்சி, இன்றைய ஊடகங்கங்கள் பெரும்பாலும் ஒரு வழி பாதையாகவே இருக்கின்றன, ஊடகங்கள் சொல்பவைதான் செய்திகள், ஊடகங்கள்
சொல்பவைதான் மக்கள் கருத்துகள் என்று நினைக்க தோன்றும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சி மற்றும் பல்வேறு தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கான
சார்புகளாக செய்திகளை தருகின்றன, இந்த நிலையில் உங்களுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சி செய்தியாக வெளிவரும் போது திரித்து வெளியிடப்பட்டிருந்தால் "ஏய் இது இல்லை நடந்தது"
என்று கத்த தோன்றுமல்லவா? அதற்கான இடம் தான் இந்த தமிழ்வெளி.இப்படி எழுதுபவர்களை வலைப்பதிவர்கள் என்கிறோம்.

வலைப்பதிவு என்பது உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம், உங்கள் குரலை பதிவு செய்ய, உங்கள் உணர்ச்சிகளை கொட்ட, கதை, கவிதை, கட்டுரை அரசியல் என எதையும் எழுத ஒரு இடம். யாரும் இதை வெளியிடம் முடியாது என்று சொல்ல முடியாது, யாரும் உங்கள் கட்டுரைகளை வெட்டி சுருக்க முடியாது. நீங்கள் தான் இங்கே எடிட்டர், ஆசிரியர் எல்லாம்.

அப்போ தமிழ்வெளி? தமிழ்வெளி என்பது நீங்கள் எழுதும் வலைப்பதிவை உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது... உங்கள் கட்டுரைகள் தமிழ்வெளியின் முதல்பக்கத்தில் சில வரிகளுடன் வெளியாகும் தமிழ்வெளிக்கு வரும் வாசகர்கள் உங்கள் கட்டுரையை விரும்பினால் படிப்பார்கள்...

அலைகள் இல்லாமல் கடல் இல்லை, வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் இல்லாமல் தமிழ்வெளி இல்லை...


வலைப்பதிவு துவங்கனுமா? பணம் செலவு செய்ய தேவையில்லை, எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை... blogger.com,
wordpress.com போன்ற தளங்கள் இலவசமாக வலைப்பதிவு சேவை வழங்குகின்றன, தமிழில் தட்டச்ச அட ஆங்கிலத்தில் தமிழ்வார்த்தை
அடிப்பது போல அதாங்க chat இல் அம்மா என்று தட்டச்ச ammA என்று அடிப்பீர்களே அது போதும், தமிழ்வெளி ஒருங்குறி எழுதி (Tamil Unicode Editor) பக்கத்தில் போய் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சலாம் அல்லது முகுந்த் தமிழ் இணைய உலகிற்கு வழங்கிய ஈ‍ கலப்பை என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவி பயன்படுத்தலாம்.

அடுத்ததாக உங்கள் வலைப்பதிவு முகவரியை கொண்டு வந்து தமிழ்வெளியில் இந்த பக்கத்தில் சென்று சேர்த்து விடுங்கள்...

ஓரிரு நாட்களில் தமிழ்வெளி நிர்வாகிகள் திரட்டியில் இணைத்துவிடுவார்கள்... இது ஒரே ஒரு முறை செய்தால் போதும்... பிறகென்ன ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் எழுத்தை பதிவிடும்போதும் தமிழ்வெளி திரட்டி தானாகவே உங்கள் புதுபதிவை கொண்டு வந்து தமிழ்வெளி முகப்பில் காண்பிக்கும்.


தமிழ்வெளியின் சிறப்பு தானாகவே அதிவிரைவில் திரட்டுவது, தமிழ்வெளி திரட்டியின் சேவையை பயன்படுத்து எங்கள் நிரலிகள் எதையும் உங்கள் வலைப்பதிவில் இணைக்க
தேவையில்லை... (free from scripts)

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் – அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள்
பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.


மேற்கண்டவை இலங்கை சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்று

தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை... தமிழ்வெளியில் இணைப்பதற்கான விதிமுறைகள்(Terms and Conditions) பொறுப்புதுறப்பு(Disclaimer) பற்றிய விபரங்கள் இங்கே படிக்கலாம்.



இது மட்டுமின்றி தமிழ்வெளி வேலைவாய்ப்பு விளம்பர தளம், தமிழ்வெளி சிறப்பு பகுதி, தமிழ்வெளிக்கு என பிரபலங்கள் அளித்த பேட்டிகள், தமிழ்வெளிக்காக பதிவு
செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் உரைகள் என பல பகுதிகள் உள்ளன.

தமிழ்வெளி ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசாய் தினுசு தினுசாய்... இது ஒரு சுதந்திர வெளி...

என்னங்க தமிழ்வெளி புடிச்சிருக்கா? உங்கள் நண்பர்களிடமும் இங்கே அழுத்தி பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Bookmark and Share

குறிச்சொல் துரத்தல் - இது தமிழ்வெளியில் புதுசு

தமிழ்வெளி புதிய பகுதிகள்
More than a Blog Aggregator

குறிச்சொல் துரத்தல்

ஒரு வலைப்பதிவினை கூகிள் ரீடர் போன்றதொரு செய்தியோடை திரட்டி மூலம் பின் தொடரலாம், ஒரு குறிப்பிட்ட பதிவின் மறுமொழிகளையும் இது போல பின் தொடரலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட குறிச்சொல்லை பின் தொடரும் வாய்ப்பு தமிழ் பதிவுலகில் இது வரை இல்லை, எடுத்துக்காட்டாக "அங்காடித்தெரு", "நித்யானந்தா" அல்லது "சாருநிவேதிதா" பற்றிய தமிழ்வெளியில் திரட்டப்படும் எந்த பதிவு வந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை உங்களுக்கு மின்மடல் தானாக அனுப்பப்படும், இதனால் தாங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியை பற்றிய எந்த பதிவையும் தவறவிடாமல் தொடரலாம்.

இது மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்ப்பட்ட குறிசொற்களையும் தொடரலாம்

மேலும் எந்த நாள் முதல்(From Date) எந்த நாள் வரை(To Date) என்று குறிப்பிட்டுவிட்டால் குறிச்சொல் துரத்தல் மின்மடல்கள் அந்த நாட்களுக்கு மட்டுமே அனுப்பப்படும், இதனால் தேவையற்ற மின்மடல்களை தவிர்க்கலாம்.

வலைப்பக்கம் இணைத்தல் / பகிரல் (Book mark / Tagging / Sharing)

தமிழ்வெளி இதுவரை தளத்தில் இணைக்கப்பட்ட செய்தியோடைகளை மட்டுமே திரட்டிக்கொண்டிருந்தது, இந்த செய்தியோடைகள் மட்டுமின்றி பிடித்தமான பயனுள்ள வலைப்பக்கங்களை பயனர்களால் தமிழ்வெளி தளத்தில் நேரடியாக இணைக்க இது பயன்படுகிறது.

நண்பருக்கு பரிந்துரைத்தல், டிவிட்டர், ஃபேஸ்புக்கில் இணைத்தல்

குறிப்பிட்ட பதிவை நண்பருக்கு பரிந்துரைத்தல் மற்றும் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் பதிவுகளை எளிதாக இணைத்தல் பகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் சில வாரங்களில் தமிழ் புக்மார்க் தளங்களில் இணைக்கும் வசதியும் கூடுதலாக செய்யப்படும்.

தமிழ்வெளி மூன்றாண்டு நிறைவு

தமிழ்வெளி தன் மூன்றாம் ஆண்டை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ்வெளி தன் மூன்றாம் ஆண்டை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது... இந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்வெளி ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தை தமிழ் இணைய தளங்களில் பெற்றிருப்பதற்க்கு தமிழ்வெளி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் தமிழ்வெளி நன்றியை தெரிவிக்கின்றது.

முதல் இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எந்த முயற்ச்சியும் சோதனைகளும் எடுக்கப்படாமல் இருந்த தமிழ்வெளி சென்ற ஆண்டில் புதியதொரு முகப்பு பக்கத்துடனும் தமிழ்வெளி திரட்டி எஞ்சினின் திறன் மேம்படுத்தப்பட்டதுடன் தமிழ்வெளிக்காக பேராசிரியர் சுப.வீ, புதியதமிழகம் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மதிமுக தலைவர்களில் ஒருவரான மல்லை சத்யா மற்றும் சிலரின் சிறப்பு பேட்டிகள் வெளியிடப்பட்டன.

தமிழ் இணையவெளியில் ஏன் தமிழக ஊடகவெளியிலேயே இதுவரை இல்லாத அளவிற்க்கு பெரிய அளவிலான பரிசுகளுடன் நடைபெற்ற மணற்கேணி-2009 கருத்தாய்வு போட்டியில் சிங்கை வலைப்பதிவர் குழுமத்துடன் இணைந்து தமிழ்வெளியும் பங்குபெற்றது தமிழ்வெளிக்கு ஒரு மகிழ்வான நிகழ்வு மட்டுமின்றி தமிழ்வெளி சமுதாயம் சார்ந்த முயற்ச்சிகளில் பங்களிப்பதில் எப்போதும் முனைப்பு காட்டுவதுடன் பெருமையும் அடைகிறது.

முதல் இரண்டாண்டுகளில் இல்லாத அளவிற்க்கு மூன்றாம் ஆண்டில் தமிழ்வெளிக்கான வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அதிகரித்ததும், குறிப்பாக இந்தியாவிற்க்கு வெளியே பெரிய அளவிலான வாசகர்களையும் வரவேற்ப்பையும் பெற்றது.

அதிகரித்த வாசகர்கள் மற்றும் பதிவர்கள் அளவிற்க்கு இணையாக தமிழ்வெளி வழங்கியால் சிறப்பாக செயல்பட இயலவில்லை, அதனால் சில தடங்கல்கள் அவ்வப்போது ஏற்ப்பட்டன, தற்போது திறன் மிகுந்த வழங்கிக்கு மாறியுள்ளதால் இம்மாதியான சிக்கல்கள் ஏற்படாது.

தமிழ்வெளி தொடர்பாகவும் பதிவுகள் இணைப்பதின் பிரச்சினைகள் தொடர்பாக அனுப்பப்பட்ட மின்மடல்களுக்கு உடனடியாக சிக்கல்களை சரி செய்வதோ உடனடியாக மின்னஞ்சல் அனுப்புவதோ சில நேரங்களில் இயலாமல் ஆகிவிட்டது, இதற்க்கு நிர்வாகம் தன் வருத்தத்தை தெரிவிக்கின்றது.

தமிழ்வெளி தற்போதும் கூட சில தனிநபர் முயற்சிகளாலும் அவர்களின் ஓய்வு நேர செயல்பாடுகள் நேர நெருக்கடி காரணமாக சில நேரங்களில் உடனுக்குடன் பதில் அனுப்பவதும் பிரச்சினைகளை சரி செய்வதுமான புரொஃபஷனலிசம் சற்று குறைவாக இருக்கும்போது வாசகர்கள் மற்றும் பதிவர்கள் மன்னித்து தயவு செய்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.

இன்னும் சில வாரங்களில் "செய்திவெளி" மற்றும் "திரைவெளி" என்ற இரு புதிய பகுதிகள் வர உள்ளன, "தமிழ்வெளி உரையாடி"யும் மீண்டும் செயல்படத்துவங்கும்.


வாசகர்கள் மற்றும் பதிவர்கள் தங்களின் தொடர்ச்சியான ஆதரவை தமிழ்வெளிக்கு அளிக்குமாறூ வேண்டும் இதே வேலையில் தமிழ்வெளி வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் தமிழ்வெளி தம் நன்றியை உரித்தாக்குகின்றது.