Tuesday, January 31, 2012

தமிழ்வெளி வழக்கம் போல பதிவுகளை திரட்டும் - blogger டொமைன் .com லிருந்து .in மாற்றம்

தமிழ்வெளி வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு வணக்கம், இன்று கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் பல்வேறு வலைப்பதிவர்களின் முகவரி blogspot.com என்று முடிவடைவதிலிருந்து blogspot.in என்று முடிவடையுமாறு கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் மாற்றமடைந்துள்ளது.

இதனால் பதிவுகளை உடனுக்குடன் இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன, எனினும் இந்த சிக்கல்கள் களையப்பட்டு புதியதாக தமிழ்வெளியில் மீண்டுன் .in என்று முடிவடையும் வலைப்பதிவுகளை சேர்க்காமலேயே திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வலைப்பதிவர்கள் எதுவும் செய்யத்தேவையில்லை, வழமை போலவே உங்கள் வலைப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ்வெளி லோகோவை அழுத்தியோ அல்லது தமிழ்வெளி தளத்தில் "பதிவை புதுப்பிக்க" பகுதியில் உங்கள் வலைப்பதிவு முகவரியை தந்தோ புதுப்பிக்கலாம்.


தமிழ்வெளியில் பதிவுகளை இணைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தி செல்லுங்கள்.

.in என்று முடிவடையும் ப்லாக்கர்களுக்கு தமிழ்வெளியில் திரட்டுவதற்க்கு செய்யப்பட்ட இந்த ஏற்பாடு தற்காலிக ஏற்பாடே, கூகிள் நிறுவனத்தின் சேவை மாற்றம் தொடர்பாக முழுவிவரங்கள் தெரிந்த பின் இது தொடர்பான நிரந்தர ஏற்பாடு விரைவில் செய்யப்படும்.

Wednesday, June 29, 2011

தமிழ்வெளி வாசகர் பகிர்ந்தவை பகுதி வேலை செய்யவில்லை

பிற்சேர்க்கை:
தமிழ்வெளியில் வாசகர்கள் பகிர்ந்தவை பகுதியில் ஏற்பட்ட வழு சரிசெய்யப்பட்டுள்ளது, இனி வழக்கம் போல் வாசகர்கள் தங்கள் பக்கங்களை பகிரலாம்


தமிழ்வெளி பயனாளர்களுக்கு வணக்கம்,

கடந்த சில மணி நேரங்களாக "வாசகர் பகிர்ந்தவை பகுதி", இதில் ஏற்பட்ட வழுகாரணமாக அனைத்து பயனாளர்களும் கீழ் கண்ட செய்தியை பெறுவார்கள்..

This userid or the website is banned by admin (keywords misuse or added so many links)... if you want to revoke, please contact admin(at)tamilveli.com Sorry!!!

இதை இன்னும் 12 மணி நேரத்திற்க்குள் சரிசெய்துவிடுவோம், அதன் பின் வாசகர்கள் பகிர்ந்தவை பகுதியில் வழக்கம் போல பதிவுகளை பகிரலாம்.

வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம்.

நன்றி
நிர்வாகி
தமிழ்வெளி

Sunday, October 31, 2010

தமிழ்வெளியில் காப்பி பேஸ்ட் மற்றும் தவறான குறிசொற்கள் அளிக்கும் வலைப்பதிவுகள் தடைசெய்வது குறித்த அறிவிப்பு


தமிழ்வெளி இணையதளம் தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் செய்தி உலகில் ஒரு முக்கிய இடம்பெற காரணமாக இருந்த வாசகர்களுக்கும், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் செய்தி பதிவுகள் தளங்களுக்கும் தமிழ்வெளியின் நன்றியை உரித்தாக்குகிறோம்.

தமிழ்வெளி சில நண்பர்களுடைய உழைப்பின் உதவியினால் இவர்களின் அன்றாட வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி நடத்தப்படுகிறது, இது ஒரு முழுநேரமாகவோ லாப நோக்கிலான நிறுவனமாகவோ நடத்தப்படவில்லை தமிழ்வெளி திரட்டியின் மிகப்பெரும்பாலானவைகள் தானியங்கி முறையில் நடைபெறுகின்றன, முழு நேரமும் தமிழ்வெளியில் அமர்ந்து அட்மின் வேலை செய்துகொண்டிருப்பது தமிழ்வெளியை நடத்தும் தனி நபர்களுக்கு சாத்தியமற்றது...

தொடர்பில்லாத குறிசொற்கள்
சில வலைப்பதிவுகள், தளங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத குறிசொற்கள் தந்து தங்கள் பதிவுகளை முன்னிறுத்துகின்றனர். அது போன்றே ஒரே நேரத்தில் வாசகர் பரிந்துரையை முழுமையாக ஆக்கிரமிக்கின்றனர், முழுநேரமும் எங்களால் இதை கண்காணிப்பதுவோ ஒவ்வொருமுறை எச்சரிக்கை அனுப்புவதும் நடைமுறையில் இயலாத ஒன்று என்பதால் இனி இம்மாதிரி தவறான குறிசொற்களை தரும் வலைப்பதிவுகள், வாசகர் பகிர்ந்தவைகள் முன்னறிவிப்பின்றி தமிழ்வெளியிலிருந்து நீக்கப்படும் மேலும் இந்த வலைப்பதிவுகள், பயனர்கள் தமிழ்வெளியில் இணைக்கப்படுவது தடை செய்யப்படும்..

காப்பி & பேஸ்ட் தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள்
தமிழ்வெளி தளத்தில் இதுவரை செய்தி தளங்கள், லாப நோக்குடன் நடத்தப்படும் தமிழ்தளங்களை தடைசெய்யவில்லை, ஆனால் சில வலைப்பதிவுகளும் இணையதளங்களும் தங்கள் தளத்தில் பெரும்பாலும் அல்லது முழுவதும் தங்கள் சொந்த செய்திகள் அல்லாத விசயங்களையே போடுவதாலும் ஒரே செய்தியே வெவ்வேறு வலைப்பதிவுகள் மற்றும் செய்தி தளங்களால் தமிழ்வெளியில் இணைக்கப்படுவதாலும் ஒரே செய்தி திரும்ப திரும்ப தமிழ்வெளி தளத்தில் வெளிவருகின்றது. இவை தமிழ்வெளி வாசகர்களுக்கு எரிச்சலூட்டுவதாலும் இது தொடர்பாக தமிழ்வெளிக்கு நிறைய முறைப்பாடுகள் வந்துள்ளதாலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. யாருடைய செய்தி உண்மை, எது காப்பிரைட்டுக்குட்பட்டது என்ற சர்ச்சையினுள் தமிழ்வெளி இறங்காது ஆனால் தொடர்ச்சியாக காப்பி & பேஸ்ட்க்காக நடத்தப்படும் இணையதளங்கள், வலைப்பதிவுகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்படும். அதே போன்று ஒரே தளத்திற்க்காக பல்வேறு வலைப்பதிவுகள் உருவாக்கி அதிலிருந்து இணைப்பு கொடுக்கப்படும் தளங்களும் அந்தந்த தளங்களுக்கேற்ப பரிசீலித்து நீக்கப்படும்.

தமிழ்வெளி தொடர்ச்சியாக வாசகர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும், செய்தி தளங்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவதற்காகவே கடந்த நான்காண்டுகளில் முதன்முறையாக இம்மாதிரியான கட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறோம்...

தமிழ்வெளியில் திரட்டப்படாத பதிவுகள் பற்றி தெரிவியுங்கள்
சிலரின் வலைப்பதிவுகள், தளங்கள் மேற்கூறப்பட்ட எந்த காரணங்களும் இல்லாமல் தொழில்நுட்ப காரணங்களால் திரட்டப்படாமல் போயிருக்கலாம், எனவே உங்கள் தளம் திரட்டப்படவில்லை என்ற சந்தேகமிருப்பின் எங்களுக்கு admin(at)tamilveli.com என்பதற்க்கு மின்மடல் அனுப்பவும், தொழில்நுட்ப காரணங்கள் தவறுதலாக திரட்டப்படாமல் இருந்தால் உடனடி நடவடிக்கை எடுப்போம்

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் அதில் தமிழ்வெளி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது...

தமிழ்வெளி ஒரு மாற்று ஊடகத்தை பெறும் முயற்சி... தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை... மிகுந்த நேர நெருக்கடி, பொருள்நெருக்கடி, உழைப்பில் நடத்தப்படும் தமிழ்வெளி தளத்திற்க்கு புரிந்துணர்வுடன் கூடிய உங்களின் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

Saturday, September 4, 2010

தமிழ்வெளியில் தானியங்கியாக பதிவுகள் திரப்படுவது குறித்த முக்கிய அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்,
தமிழ்வெளியில் மிக முக்கிய பங்களிக்கும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது நன்றி.

தமிழ்வெளி பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் சிறப்பான சேவையை வழங்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது, தமிழ்வெளியில் இணைந்திருக்கும் பதிவுகள் இது வரை தானியங்கியாகவே திரட்டப்பட்டுக்கொண்டுள்ளது, இதனால் எந்த வித நிரலிகளும் வலைப்பதிவில் இணைக்கப்படாமலும் ஒவ்வொருமுறை பதிவிட்டவுடன் இணையதளத்திற்க்கு வந்து வலைப்பதிவு கட்டுரையை இணைக்காமலுமே தானியங்கியாக ஒவ்வொரு முறை பதிவிட்டவுடன் தமிழ்வெளி திரட்டி பதிவுகளை திரட்டி தமிழ்வெளி தளத்தில் காண்பித்துக்கொண்டிருக்கின்றது.

நாளுக்கு நாள் கூடிவரும் பதிவுகளினாலும் ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் தமிழ்வெளி திரட்டியில் இணைக்கப்பட்டிருப்பதாலும் தமிழ்வெளி வழங்கிக்கு(server) சுமை ஏற்பட்டது, இதனால் ஏற்கனவே ஒரு முறை திறன் கூடிய வழங்கிக்கு(Server) மாறினோம், ஆனாலும் ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகளை தானியங்கியாக திரட்டுவதனால் தமிழ்வெளி வழங்கியின் சுமை கூடுதலாகிறது, எனவே தமிழ்வெளி 3 ஆண்டுகளுக்கும் மேலாக தானாக பதிவுகளை திரட்டி வந்ததை நிறுத்தி விட்டு அதற்க்கு பதில் ஒரு சிறிய மாற்று ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ்வெளி தொடர்ச்சியாக நிரலில்லா(Script free) சேவையை வழங்குவதையே முனைப்பாக கொண்டுள்ளதால் புதிய பதிவுகளை திரட்டுவதற்க்கும் எந்த நிரலையும்(script) உங்கள் பதிவுகளில் இணைக்கத் தேவையில்லை... கீழ்கண்ட இரு எளிதான வழிகளிலே உங்கள் புதிய பதிவை தமிழ்வெளியில் இணைக்கலாம்.

1. உங்கள் பதிவில் தமிழ்வெளி தளத்திற்க்கு இணைப்பு கொடுத்திருந்தால்(தமிழ்வெளி லோகோ வை இணைத்திருந்தால்) நீங்கள் பதிவிட்டவுடன் உங்கள் வலைப்பதிவிலிருந்து அந்த தமிழ்வெளி இணைப்பு சுட்டியை ஒரு முறை அழுத்துங்கள், தமிழ்வெளி திரட்டி எந்திரம் உங்கள் புதிய பதிவை திரட்டி காண்பிக்கும்...




தமிழ்வெளிக்கு உங்கள் பதிவில் இணைப்புதர தமிழ்வெளி தளத்தில் வலது பக்கத்தில் உள்ள பட நிரலியை இணைக்கவும்.


அல்லது

2. தமிழ்வெளி இணையதளத்தில் இடதுபக்கத்தில் உள்ள பட்டியலில் "பதிவை புதுப்பிக்க" என்ற சுட்டியை அழுத்தி உங்கள் பதிவை தமிழ்வெளியில் இணைக்கலாம்.






செப்டம்பர் 10ம் நாள் வரை தற்போதைப்போல தானியங்கியாவும் பதிவுகள் திரட்டப்படும், புதிய முறைகளிலும் பதிவு திரட்டப்படும், செப்டம்பர் 10ம் நாளுக்குபின் தமிழ்வெளி தானியங்கியாக பதிவு திரட்டுவதை நிறுத்திக்கொள்ளும், மேலே குறிப்பிட்டிருக்கும் இரண்டு வழிகளில் ஏதேனும் ஒரு வழியிலேயே பதிவு திரட்டப்படும்...

இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலோ, விளக்கம் தேவைப்பட்டாலோ adminஅட்tamilveli.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்...

Wednesday, April 28, 2010

தெளி குறும்பட வெளியீடு - தமிழ்வெளி ஆதரவு



ஏப்ரல் 30, 2010 அன்று காலை காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மண்டபத்தில் காலை 10:30 முதல் மாலை 5.00 வரை ஓவியர் உமாபதி அவர்களின் ஓவியக்கண்காட்சியும் அதன் பின்

மாலை 6:00 மணிக்கு தோழர் வே.பன்னீர் அவர்கள் இயக்கிய தெளி குறும்பட தகட்டை திரையுலக படத்தொகுப்பு மேதை திரு.B.லெனின் அவர்கள் வெளியிடுகிறார்...

தெளி இயக்குனர் தோழர் வே.பன்னீர் அவர்களுக்கும் தோழர் ஓவியர் உமாபதி அவர்களுக்கும் தமிழ்வெளி தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது...

தெளி குறும்படம் பற்றிய மா.காளிதாஸ் அவர்களின் விமர்சனம் கீழே, தெளிவாக தெரிய படத்தின் மேல் அமுக்கவும்...





விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்



Wednesday, April 14, 2010

இது என்ன தமிழ்வெளி?

இது என்ன தமிழ்வெளி?

யாருக்கெல்லாம் இந்த தமிழ்வெளி?Bookmark and Share

அரசியல், கதை, கட்டுரைகள், திரைப்படம், தொழில்நுட்பம், சும்மா ஜாலியா பொழுதை கழிக்க என எதற்கும் படிக்கலாம் தமிழ்வெளியை.... ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசா தினுசு தினுசா வருவது தான் தமிழ்வெளி...

ஆமாம் இதில் எழுதுவது யார்? இதில் எழுதுவதெல்லாம் உங்களைப் போன்றவர்களே... உங்க‌ள் குர‌ல் இங்கே சுத‌ந்திர‌மாக‌ ஒலிக்கும்...

தமிழ்வெளி ஒரு மாற்று ஊடகத்தை பெறும் முயற்சி, இன்றைய ஊடகங்கங்கள் பெரும்பாலும் ஒரு வழி பாதையாகவே இருக்கின்றன, ஊடகங்கள் சொல்பவைதான் செய்திகள், ஊடகங்கள்
சொல்பவைதான் மக்கள் கருத்துகள் என்று நினைக்க தோன்றும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சி மற்றும் பல்வேறு தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கான
சார்புகளாக செய்திகளை தருகின்றன, இந்த நிலையில் உங்களுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சி செய்தியாக வெளிவரும் போது திரித்து வெளியிடப்பட்டிருந்தால் "ஏய் இது இல்லை நடந்தது"
என்று கத்த தோன்றுமல்லவா? அதற்கான இடம் தான் இந்த தமிழ்வெளி.இப்படி எழுதுபவர்களை வலைப்பதிவர்கள் என்கிறோம்.

வலைப்பதிவு என்பது உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம், உங்கள் குரலை பதிவு செய்ய, உங்கள் உணர்ச்சிகளை கொட்ட, கதை, கவிதை, கட்டுரை அரசியல் என எதையும் எழுத ஒரு இடம். யாரும் இதை வெளியிடம் முடியாது என்று சொல்ல முடியாது, யாரும் உங்கள் கட்டுரைகளை வெட்டி சுருக்க முடியாது. நீங்கள் தான் இங்கே எடிட்டர், ஆசிரியர் எல்லாம்.

அப்போ தமிழ்வெளி? தமிழ்வெளி என்பது நீங்கள் எழுதும் வலைப்பதிவை உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது... உங்கள் கட்டுரைகள் தமிழ்வெளியின் முதல்பக்கத்தில் சில வரிகளுடன் வெளியாகும் தமிழ்வெளிக்கு வரும் வாசகர்கள் உங்கள் கட்டுரையை விரும்பினால் படிப்பார்கள்...

அலைகள் இல்லாமல் கடல் இல்லை, வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் இல்லாமல் தமிழ்வெளி இல்லை...


வலைப்பதிவு துவங்கனுமா? பணம் செலவு செய்ய தேவையில்லை, எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை... blogger.com,
wordpress.com போன்ற தளங்கள் இலவசமாக வலைப்பதிவு சேவை வழங்குகின்றன, தமிழில் தட்டச்ச அட ஆங்கிலத்தில் தமிழ்வார்த்தை
அடிப்பது போல அதாங்க chat இல் அம்மா என்று தட்டச்ச ammA என்று அடிப்பீர்களே அது போதும், தமிழ்வெளி ஒருங்குறி எழுதி (Tamil Unicode Editor) பக்கத்தில் போய் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சலாம் அல்லது முகுந்த் தமிழ் இணைய உலகிற்கு வழங்கிய ஈ‍ கலப்பை என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவி பயன்படுத்தலாம்.

அடுத்ததாக உங்கள் வலைப்பதிவு முகவரியை கொண்டு வந்து தமிழ்வெளியில் இந்த பக்கத்தில் சென்று சேர்த்து விடுங்கள்...

ஓரிரு நாட்களில் தமிழ்வெளி நிர்வாகிகள் திரட்டியில் இணைத்துவிடுவார்கள்... இது ஒரே ஒரு முறை செய்தால் போதும்... பிறகென்ன ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் எழுத்தை பதிவிடும்போதும் தமிழ்வெளி திரட்டி தானாகவே உங்கள் புதுபதிவை கொண்டு வந்து தமிழ்வெளி முகப்பில் காண்பிக்கும்.


தமிழ்வெளியின் சிறப்பு தானாகவே அதிவிரைவில் திரட்டுவது, தமிழ்வெளி திரட்டியின் சேவையை பயன்படுத்து எங்கள் நிரலிகள் எதையும் உங்கள் வலைப்பதிவில் இணைக்க
தேவையில்லை... (free from scripts)

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் – அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள்
பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.


மேற்கண்டவை இலங்கை சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்று

தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை... தமிழ்வெளியில் இணைப்பதற்கான விதிமுறைகள்(Terms and Conditions) பொறுப்புதுறப்பு(Disclaimer) பற்றிய விபரங்கள் இங்கே படிக்கலாம்.



இது மட்டுமின்றி தமிழ்வெளி வேலைவாய்ப்பு விளம்பர தளம், தமிழ்வெளி சிறப்பு பகுதி, தமிழ்வெளிக்கு என பிரபலங்கள் அளித்த பேட்டிகள், தமிழ்வெளிக்காக பதிவு
செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் உரைகள் என பல பகுதிகள் உள்ளன.

தமிழ்வெளி ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசாய் தினுசு தினுசாய்... இது ஒரு சுதந்திர வெளி...

என்னங்க தமிழ்வெளி புடிச்சிருக்கா? உங்கள் நண்பர்களிடமும் இங்கே அழுத்தி பகிர்ந்து கொள்ளுங்களேன்...

Bookmark and Share

குறிச்சொல் துரத்தல் - இது தமிழ்வெளியில் புதுசு

தமிழ்வெளி புதிய பகுதிகள்
More than a Blog Aggregator

குறிச்சொல் துரத்தல்

ஒரு வலைப்பதிவினை கூகிள் ரீடர் போன்றதொரு செய்தியோடை திரட்டி மூலம் பின் தொடரலாம், ஒரு குறிப்பிட்ட பதிவின் மறுமொழிகளையும் இது போல பின் தொடரலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட குறிச்சொல்லை பின் தொடரும் வாய்ப்பு தமிழ் பதிவுலகில் இது வரை இல்லை, எடுத்துக்காட்டாக "அங்காடித்தெரு", "நித்யானந்தா" அல்லது "சாருநிவேதிதா" பற்றிய தமிழ்வெளியில் திரட்டப்படும் எந்த பதிவு வந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை உங்களுக்கு மின்மடல் தானாக அனுப்பப்படும், இதனால் தாங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியை பற்றிய எந்த பதிவையும் தவறவிடாமல் தொடரலாம்.

இது மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்ப்பட்ட குறிசொற்களையும் தொடரலாம்

மேலும் எந்த நாள் முதல்(From Date) எந்த நாள் வரை(To Date) என்று குறிப்பிட்டுவிட்டால் குறிச்சொல் துரத்தல் மின்மடல்கள் அந்த நாட்களுக்கு மட்டுமே அனுப்பப்படும், இதனால் தேவையற்ற மின்மடல்களை தவிர்க்கலாம்.

வலைப்பக்கம் இணைத்தல் / பகிரல் (Book mark / Tagging / Sharing)

தமிழ்வெளி இதுவரை தளத்தில் இணைக்கப்பட்ட செய்தியோடைகளை மட்டுமே திரட்டிக்கொண்டிருந்தது, இந்த செய்தியோடைகள் மட்டுமின்றி பிடித்தமான பயனுள்ள வலைப்பக்கங்களை பயனர்களால் தமிழ்வெளி தளத்தில் நேரடியாக இணைக்க இது பயன்படுகிறது.

நண்பருக்கு பரிந்துரைத்தல், டிவிட்டர், ஃபேஸ்புக்கில் இணைத்தல்

குறிப்பிட்ட பதிவை நண்பருக்கு பரிந்துரைத்தல் மற்றும் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் பதிவுகளை எளிதாக இணைத்தல் பகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் சில வாரங்களில் தமிழ் புக்மார்க் தளங்களில் இணைக்கும் வசதியும் கூடுதலாக செய்யப்படும்.