Tuesday, January 31, 2012

தமிழ்வெளி வழக்கம் போல பதிவுகளை திரட்டும் - blogger டொமைன் .com லிருந்து .in மாற்றம்

தமிழ்வெளி வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கு வணக்கம், இன்று கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் பல்வேறு வலைப்பதிவர்களின் முகவரி blogspot.com என்று முடிவடைவதிலிருந்து blogspot.in என்று முடிவடையுமாறு கூகிள் நிறுவனத்தின் blogger சேவையில் மாற்றமடைந்துள்ளது.

இதனால் பதிவுகளை உடனுக்குடன் இணைப்பதில் சில சிக்கல்கள் எழுந்தன, எனினும் இந்த சிக்கல்கள் களையப்பட்டு புதியதாக தமிழ்வெளியில் மீண்டுன் .in என்று முடிவடையும் வலைப்பதிவுகளை சேர்க்காமலேயே திரட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வலைப்பதிவர்கள் எதுவும் செய்யத்தேவையில்லை, வழமை போலவே உங்கள் வலைப்பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ்வெளி லோகோவை அழுத்தியோ அல்லது தமிழ்வெளி தளத்தில் "பதிவை புதுப்பிக்க" பகுதியில் உங்கள் வலைப்பதிவு முகவரியை தந்தோ புதுப்பிக்கலாம்.


தமிழ்வெளியில் பதிவுகளை இணைப்பது தொடர்பாக தெரிந்து கொள்ள இங்கே அழுத்தி செல்லுங்கள்.

.in என்று முடிவடையும் ப்லாக்கர்களுக்கு தமிழ்வெளியில் திரட்டுவதற்க்கு செய்யப்பட்ட இந்த ஏற்பாடு தற்காலிக ஏற்பாடே, கூகிள் நிறுவனத்தின் சேவை மாற்றம் தொடர்பாக முழுவிவரங்கள் தெரிந்த பின் இது தொடர்பான நிரந்தர ஏற்பாடு விரைவில் செய்யப்படும்.

7 comments:

dsfs said...

Very useful and fast change. Thanks Tamilveli

நிதர்ஷனின் பேனா யுத்தம் said...

Thanks Tamilveli.....

Anonymous said...

நீங்கள் தான் திரட்டிகளில் முதன்மையாக பதிவர்களுக்கான மிகச்சிறந்த வேலையை செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் தமிழ்வெளி நிர்வாகத்தினர்.

Admin said...

விரைவாக தற்காலிக தீர்வு செய்தமைக்கு நன்றி!

சிவபார்கவி said...

Ok...Sir



http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi

Unknown said...

சிக்கல்களை மிக வேகமாக தீர்த்து பதிவர்களின் சிரமத்தை குறைத்த தமிழ்வெளி நிர்வாகத்திற்கும் தொழில்நுட்ப குழுவிற்கும் பதிவர்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Unknown said...

தீர்வு செய்தமைக்கு நன்றி!