குறிச்சொல் துரத்தல்
ஒரு வலைப்பதிவினை கூகிள் ரீடர் போன்றதொரு செய்தியோடை திரட்டி மூலம் பின் தொடரலாம், ஒரு குறிப்பிட்ட பதிவின் மறுமொழிகளையும் இது போல பின் தொடரலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட குறிச்சொல்லை பின் தொடரும் வாய்ப்பு தமிழ் பதிவுலகில் இது வரை இல்லை, எடுத்துக்காட்டாக "அங்காடித்தெரு", "நித்யானந்தா" அல்லது "சாருநிவேதிதா" பற்றிய தமிழ்வெளியில் திரட்டப்படும் எந்த பதிவு வந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை உங்களுக்கு மின்மடல் தானாக அனுப்பப்படும், இதனால் தாங்கள் ஒரு குறிப்பிட்ட செய்தியை பற்றிய எந்த பதிவையும் தவறவிடாமல் தொடரலாம்.
இது மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்ப்பட்ட குறிசொற்களையும் தொடரலாம்
மேலும் எந்த நாள் முதல்(From Date) எந்த நாள் வரை(To Date) என்று குறிப்பிட்டுவிட்டால் குறிச்சொல் துரத்தல் மின்மடல்கள் அந்த நாட்களுக்கு மட்டுமே அனுப்பப்படும், இதனால் தேவையற்ற மின்மடல்களை தவிர்க்கலாம்.
வலைப்பக்கம் இணைத்தல் / பகிரல் (Book mark / Tagging / Sharing)
தமிழ்வெளி இதுவரை தளத்தில் இணைக்கப்பட்ட செய்தியோடைகளை மட்டுமே திரட்டிக்கொண்டிருந்தது, இந்த செய்தியோடைகள் மட்டுமின்றி பிடித்தமான பயனுள்ள வலைப்பக்கங்களை பயனர்களால் தமிழ்வெளி தளத்தில் நேரடியாக இணைக்க இது பயன்படுகிறது.
நண்பருக்கு பரிந்துரைத்தல், டிவிட்டர், ஃபேஸ்புக்கில் இணைத்தல்
குறிப்பிட்ட பதிவை நண்பருக்கு பரிந்துரைத்தல் மற்றும் டிவிட்டர், ஃபேஸ்புக்கில் பதிவுகளை எளிதாக இணைத்தல் பகுதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் சில வாரங்களில் தமிழ் புக்மார்க் தளங்களில் இணைக்கும் வசதியும் கூடுதலாக செய்யப்படும்.
5 comments:
Hi
Now the site looks great,
Venkatesh AGE
வணக்கம் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
அருமையாக அமைந்துள்ளது வலையமைப்பு. குறிப்பாக குறிச்சொல் துரத்தல் அருமை
மிக அருமையான வசதிகளை தர நீங்கள் உங்களை வருத்திக்கொள்கிறீர்கள். தமிழ்வெளியில் இன்னும் பல புதுமைகளை செய்திடுங்கள். வித்தியாசமான ஐடியாக்களை வாசகர்களிடமிருந்து பெறலாமே! நன்றி!
குறிச்சொல் துரத்தல், புதுமையாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
நிச்சயம் இது(குறிச்சொல்) தொடர்பான பதிவுகளை படிக்க எண்ணுபவர்கள் தங்கள் பின்தொடரும் குறிச்சொற்களின் அடிப்படையில் பதிவுகளைப் பெற்று படித்து, பயனடையலாம்.
வித்தியாசமான பயனுள்ள சிந்தனை, பயன்பாடு.
படைத்தளித்தமைக்கு மிக்க நன்றி! மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகள்..!
Post a Comment