இது என்ன தமிழ்வெளி?யாருக்கெல்லாம் இந்த தமிழ்வெளி?அரசியல், கதை, கட்டுரைகள், திரைப்படம், தொழில்நுட்பம், சும்மா ஜாலியா பொழுதை கழிக்க என எதற்கும் படிக்கலாம் தமிழ்வெளியை.... ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசா தினுசு தினுசா வருவது தான் தமிழ்வெளி...ஆமாம் இதில் எழுதுவது யார்? இதில் எழுதுவதெல்லாம் உங்களைப் போன்றவர்களே... உங்கள் குரல் இங்கே சுதந்திரமாக ஒலிக்கும்... தமிழ்வெளி ஒரு மாற்று ஊடகத்தை பெறும் முயற்சி, இன்றைய ஊடகங்கங்கள் பெரும்பாலும் ஒரு வழி பாதையாகவே இருக்கின்றன, ஊடகங்கள் சொல்பவைதான் செய்திகள், ஊடகங்கள் சொல்பவைதான் மக்கள் கருத்துகள் என்று நினைக்க தோன்றும் நிலையில் பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சி மற்றும் பல்வேறு தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கான சார்புகளாக செய்திகளை தருகின்றன, இந்த நிலையில் உங்களுக்கு தெரிந்த ஒரு நிகழ்ச்சி செய்தியாக வெளிவரும் போது திரித்து வெளியிடப்பட்டிருந்தால் "ஏய் இது இல்லை நடந்தது" என்று கத்த தோன்றுமல்லவா? அதற்கான இடம் தான் இந்த தமிழ்வெளி.இப்படி எழுதுபவர்களை வலைப்பதிவர்கள் என்கிறோம். வலைப்பதிவு என்பது உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு இடம், உங்கள் குரலை பதிவு செய்ய, உங்கள் உணர்ச்சிகளை கொட்ட, கதை, கவிதை, கட்டுரை அரசியல் என எதையும் எழுத ஒரு இடம். யாரும் இதை வெளியிடம் முடியாது என்று சொல்ல முடியாது, யாரும் உங்கள் கட்டுரைகளை வெட்டி சுருக்க முடியாது. நீங்கள் தான் இங்கே எடிட்டர், ஆசிரியர் எல்லாம். அப்போ தமிழ்வெளி? தமிழ்வெளி என்பது நீங்கள் எழுதும் வலைப்பதிவை உடனடியாக வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது... உங்கள் கட்டுரைகள் தமிழ்வெளியின் முதல்பக்கத்தில் சில வரிகளுடன் வெளியாகும் தமிழ்வெளிக்கு வரும் வாசகர்கள் உங்கள் கட்டுரையை விரும்பினால் படிப்பார்கள்... அலைகள் இல்லாமல் கடல் இல்லை, வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்கள் இல்லாமல் தமிழ்வெளி இல்லை... வலைப்பதிவு துவங்கனுமா? பணம் செலவு செய்ய தேவையில்லை, எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை... blogger.com, wordpress.com போன்ற தளங்கள் இலவசமாக வலைப்பதிவு சேவை வழங்குகின்றன, தமிழில் தட்டச்ச அட ஆங்கிலத்தில் தமிழ்வார்த்தை அடிப்பது போல அதாங்க chat இல் அம்மா என்று தட்டச்ச ammA என்று அடிப்பீர்களே அது போதும், தமிழ்வெளி ஒருங்குறி எழுதி (Tamil Unicode Editor) பக்கத்தில் போய் நீங்கள் தமிழில் எளிமையாக தட்டச்சலாம் அல்லது முகுந்த் தமிழ் இணைய உலகிற்கு வழங்கிய ஈ கலப்பை என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவி பயன்படுத்தலாம். அடுத்ததாக உங்கள் வலைப்பதிவு முகவரியை கொண்டு வந்து தமிழ்வெளியில் இந்த பக்கத்தில் சென்று சேர்த்து விடுங்கள்... ஓரிரு நாட்களில் தமிழ்வெளி நிர்வாகிகள் திரட்டியில் இணைத்துவிடுவார்கள்... இது ஒரே ஒரு முறை செய்தால் போதும்... பிறகென்ன ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் எழுத்தை பதிவிடும்போதும் தமிழ்வெளி திரட்டி தானாகவே உங்கள் புதுபதிவை கொண்டு வந்து தமிழ்வெளி முகப்பில் காண்பிக்கும். தமிழ்வெளியின் சிறப்பு தானாகவே அதிவிரைவில் திரட்டுவது, தமிழ்வெளி திரட்டியின் சேவையை பயன்படுத்து எங்கள் நிரலிகள் எதையும் உங்கள் வலைப்பதிவில் இணைக்க தேவையில்லை... (free from scripts) நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் – அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும். மேற்கண்டவை இலங்கை சண்டே லீடர் பத்திரிக்கை ஆசிரியர் மறைந்த திரு லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்று தமிழ்வெளியில் திரட்டப்படும் பதிவுகளுக்கு எந்த அரசியலையும் தமிழ்வெளி கடைபிடிப்பது இல்லை... எந்த குரலையும் மறுப்பதில்லை... தமிழ்வெளியில் இணைப்பதற்கான விதிமுறைகள்(Terms and Conditions) பொறுப்புதுறப்பு(Disclaimer) பற்றிய விபரங்கள் இங்கே படிக்கலாம். இது மட்டுமின்றி தமிழ்வெளி வேலைவாய்ப்பு விளம்பர தளம், தமிழ்வெளி சிறப்பு பகுதி, தமிழ்வெளிக்கு என பிரபலங்கள் அளித்த பேட்டிகள், தமிழ்வெளிக்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்களின் உரைகள் என பல பகுதிகள் உள்ளன. தமிழ்வெளி ஒவ்வொரு நிமிடமும் புதுசு புதுசாய் தினுசு தினுசாய்... இது ஒரு சுதந்திர வெளி... என்னங்க தமிழ்வெளி புடிச்சிருக்கா? உங்கள் நண்பர்களிடமும் இங்கே அழுத்தி பகிர்ந்து கொள்ளுங்களேன்... |
Wednesday, April 14, 2010
இது என்ன தமிழ்வெளி?
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Respected sir,
Your service must be encouraged and appreciated. Please do it without any partiality.Keep it up.
I wish you .
With kind wishes.
பிறகென்ன ஒவ்வொரு முறை நீங்கள் உங்கள் எழுத்தை பதிவிடும்போதும் தமிழ்வெளி திரட்டி தானாகவே உங்கள் புதுபதிவை கொண்டு வந்து தமிழ்வெளி முகப்பில் காண்பிக்கும்.
What a great service! Thank you so much and good luck.
Vetha.Elangathilakam.
Denmark.
வணக்கம்!
தமிழ் கூறும் நல்லுலகம்
தமிழ் வெளியை தாங்கி நிற்கும்.
its nice
Post a Comment